திமுக-விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் –விஸ்பரூபம் எடுத்த நயன்தாரா விவகாரம்

dmk party taken an action actor radha ravi for controversial talk about nayanthara

by Suganya P, Mar 25, 2019, 09:45 AM IST

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. எனவே, திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்த சர்ச்சை கருத்துகளை ராதாரவி தெரிவித்தார்.

அவர் பேசுகையில், நயன்தாரா பேயாகவும் சீதையாகவும் நடிக்கிறார். எங்கள் காலத்தில் கே.ஆர் விஜயா வைத்தான் அம்மன் வேஷங்களில் போடுவார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. யார் வேண்டுமானாலும் அம்மன் வேஷம் போடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடற்றவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம், என்றார்.

ராதாரவியின் இந்த கருத்து பூதாகரமாக வெடித்தது. பல திரைத்துறை நட்சத்திரங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டனர். ராதரவியில் சர்ச்சை பேச்சு தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதிய திமுக மேலிடம், கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவரை தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, என்னால் திமுகவுக்குப் பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிய ராதாரவி, நயன்தாரா தொடர்பாக நான் பேசிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு, பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாக கொள்கிறேன் என்றார்.

You'r reading திமுக-விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் –விஸ்பரூபம் எடுத்த நயன்தாரா விவகாரம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை