இன்ஜினியரிங் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக, பொறியியல் ஆரசியர்கள் தங்கள் பணிகளை இழக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஓர் ஆண்டுக்கு வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட இரு மடங்கு அதிகம். அதே நேரம், பொறியியல் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களுக்கு, தகுந்த வேலை கிடைப்பதில்லை. அதனால், கலை அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்வு செய்கின்றனர் மாணவர்கள். இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி வாரியம் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை குறைக்க ஆணையிட்டது. தமிழகத்தில், 2017-2018ல் 30–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.
2017 - 2018 கல்வியாண்டில், 596 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டன. இதில், மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு, 85 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர்.
15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதம் தற்போது 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலையில் உள்ளது. 2019 – 2020 கல்வியாண்டில் 39 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால், ஆசிரியர்களின் விகிதமும் குறைந்தது. 2018 –ல் மட்டும் 22,000ம் பொறியியல் ஆசிரியர்கள் வேலை இழந்திருக்கின்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களான இவர்களில் குறைவான பேருக்கே வேலை கிடைத்துள்ளது. அதோடு, குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஏஐசிடியு குறைக்க உத்தரவிட்டதால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கல்லுரிகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பொறியியல் துறையில் ஆராய்சி மேன்பாடுகளை அதிகரிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைக்க பெருவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இதனால், பொறியியல் கல்வியின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.