அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள்...அதிமுகவில் இருக்கிறார்கள்...! –வெற்றிவேல் தடாலடி

ttv dinakaran ammk sleeper cells in admk

by Suganya P, Apr 27, 2019, 00:00 AM IST

அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கூறியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மூன்று எம்.எல்.ஏ-க்கள் செய்யல்பட்டதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்ததோடு, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு, பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ-க்கள், ‘கட்சிக்கு விரோதமாக தாங்கள் செயல்படவில்லை, சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிப்போம்’ என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ‘அதிமுக-விற்கு சக்தியே இல்லை. அவர்கள் எப்படி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்..? அதிமுக-வுக்குள் கோஷ்டி பூசல்கள் உள்ளன. எங்கள் நண்பர்கள் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள். எங்களுடன், தொடர்ந்து பேசி வருகிறார்கள். 22 சட்டமன்றத் தொகுதிகளில் அமமுக வெற்றி பெற்று வந்தோம் என்றால், அதிமுகவில் உள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை உடன் சேர்த்துக் கொண்டு, ஆட்சியை பிடிப்போம். புகார் சுமத்தப்பட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களை தாண்டி அமைச்சர்களும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள்' என்றவர்.,

கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்கள் வைக்க கூடாது என்ற அக்ரிமெண்ட் இருக்கா...? உச்ச நீதிமன்றம் ஏற்கனவே, சட்ட பாதுகாப்பு கொடுத்துவிட்டது. ஆகையால், மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் சட்ட பாதுகாப்பு இருக்கிறது. அவர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம். தேர்தலைத்தான் சிந்திப்போம். அந்த 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அமமுக 'சீட்' கொடுக்க தயார். அதற்கு, அவர்கள் சம்மதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

அரசியலில் மாற்றம்..! தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்..! ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

You'r reading அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள்...அதிமுகவில் இருக்கிறார்கள்...! –வெற்றிவேல் தடாலடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை