தொழிலாளர்களுக்கு திமுக தான் பாதுகாவலன்..! மே 23-க்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும்..! மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

mk Stalin says in may day, Dmk only safe guard for working sector

by Nagaraj, May 1, 2019, 14:45 PM IST

மே தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் தூத்துக்குடியில் பிரமாண்ட பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.அப்போது பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த மே 1ம் நாளை நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாடுகளில் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, மீண்டும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய நாளாக, இந்த மே 1ம் நாள் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இதைக் கொண்டாடுவதற்கு எல்லா வகைகளிலும் உரிமை படைத்திருக்கக்கூடிய ஒரு இயக்கம் உண்டு என்று சொன்னால் அது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன். நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் சொல்லலாம். நான் தான் இந்த நாட்டின் காவலாளி என்று. ஆனால் பிரதமர் மோடி அவர்களைப் பொறுத்தவரையில் நாட்டின் காவலாளி அல்ல நாட்டின் களவாணியாக அவர் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தான், இந்த நாட்டின் காவலாளியாக, ஒட்டுமொத்த தொழிலாளர்களின் காவலாளியாக தொடர்ந்து விளங்கி கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட உரிமையோடு இன்றைக்கு நாம் இந்த மே 1ம் நாளை கொண்டாடி வருகின்றோம்.

மே தினத்தை அரசு விடுமுறையாக முதன் முதலில் அறிவித்தது அண்ணா தலைமையிலான அரசு .அதன்பின் சம்பளத்துடன் கூடிய அரசு விடுமுறை என்று அறிவித்தவர் தலைவர் கருணாநிதி . அது மட்டுமின்றி வி.பி.சிங் பிரதமராக இருந்த போது,நாடு முழுவதும் சம்பௗத்துடன் கூடிய விடுமுறை விட வலியுறுத்தி வெற்றி கண்டார் கருணாநிதி .

ஆனால், இன்றைக்கு மத்திய, மாநில அளவில் இருக்கக்கூடிய அரசுகளை பொறுத்தவரையில் தொழிலாளர்கள் உரிமைகள் எந்தளவிற்கு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, விவசாயிகளின் கோரிக்கைகள் எந்த அளவிற்கு நிராகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் மறந்து விடக்கூடாது. நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உரிமைகள் எல்லாம் மோடியின் ஆட்சியில் நான்கைந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடகு வைக்கக்கூடிய நிலைக்கு இந்த ஆட்சி போய்க் கொண்டிருக்கின்றது.

அதற்கெல்லாம் மாற்றாக, ஒரு வழி காணக்கூடிய வகையில் வருகின்ற 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும், அதேபோல் ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய 18 சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும், மீதம் இருக்கக்கூடிய 4 தொகுதிகள் சேர்த்து 22 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கின்றது. அப்படி நடைபெறுகின்ற நேரத்தில் நிச்சயமாக உறுதியாக இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்கத்தான் போகின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், குறிப்பாக தொழிலாளர் தோழர்களுக்கும், ஒரு விடிவு காலம் வருகின்ற 23ம் தேதிக்கு மேல் வரவிருக்கின்றது என்பதையும் உறுதியோடஎடுத்துச் சொல்லி, இங்கு திரண்டு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அத்துனை பேருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மே தின வாழ்த்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி சொன்னால் போதும்...40 திமுக எம்.எல்.ஏ-க்கள் ‘ரெடி’!

You'r reading தொழிலாளர்களுக்கு திமுக தான் பாதுகாவலன்..! மே 23-க்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும்..! மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை