எடப்பாடி பழனிசாமி சொன்னால் போதும்...40 திமுக எம்.எல்.ஏ-க்கள் ரெடி!

40 dmk mlas ready give support to edappadi palanisamy

May 1, 2019, 00:00 AM IST

மே 19ம் தேதி நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன், வாக்காளர்களிடம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.

அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் தலைமையில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசரடிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தொழிலாளர்களை வஞ்சித்த கட்சி திமுக, அதனால் அவர்கள் மே தினம் கொண்டாடுவது ஏற்புடையதாக இல்லை.

தொழிலாளர்கள் தினத்தைக் கொண்டாட முழு தகுதியும் கொண்ட கட்சி அதிமுகதான். அதிமுக-வின் கொள்கைக்கு எதிராக டிடிவி தினகரனுடன் ஆதரவாக செயல்பட்டு வந்தனர் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் பிரபு. ஆகையால் தான் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்காக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏன் திமுக தலைவர் கொந்தளிக்கிறார்? இதில் இருந்தே தெரிய வில்லை..டிடிவி தினகரனுடன் ஸ்டாலின் மறைமுக கூட்டணி  வைத்திருக்கிறார் என்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் அசைத்து, சொன்னால் போதும் திமுகவில் உள்ள 40 எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர ரெடியாக இருக்கிறார்கள்’ என்றவர்,`புற வாசல் வழியாக ஆட்சியை பிடிக்கவே திமுக துடித்து வருகிறது' என்று கூறினார். 

4 தொகுதி இடைத்தேர்தல்; மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இன்று முதல் பிரச்சாரம்

You'r reading எடப்பாடி பழனிசாமி சொன்னால் போதும்...40 திமுக எம்.எல்.ஏ-க்கள் ரெடி! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை