கோவையை அடுத்த இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
1200 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் விழுந்ததில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சி பெற்ற போது , ஒரு AFT டேங்கில் தீப்பற்றியதால், பதுகாப்பு கருதி அது கீழே கழற்றி விடப்பட்டதாக விமான பயிற்சித் துறை விளக்கம்.