செல்ஃப் டிரைவ் போகிறீர்களா? இவற்றை கவனியுங்கள்

Are you self-driver? Note the points before starting up

by SAM ASIR, Jun 20, 2019, 18:10 PM IST

இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் செல்ஃப் டிரைவிங் பண்பாடு விரைவாக பரவி வருகிறது. பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமானம் ஆகியவற்றில் பயணிப்பதற்குப் பதிலாக, வாடகைக்கு ஒரு கார் எடுத்து அதை தாங்களாகவே ஓட்டிச் செல்வதையே பலர் விரும்புகிறார்கள். அப்படி பயணிப்பது பல்வேறு விதங்களில் வசதியாக இருக்கும் என்பதால் அதை தெரிவு செய்கின்றனர்.

வாடகைக்கு செல்ஃப் டிரைவ் கார் அளிக்கும் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் இத்தொழில், வரும் நாள்களிலும் பெரிய வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 80,000 கோடி ரூபாய் மதிப்பை இது தொடும் என்று கூறப்படுகிறது. இவ்வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில், சுற்றுலா வளர்ச்சியில், நெடுஞ்சாலை கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடும்.
காரை தாங்களாகவே ஓட்டிச்செல்ல விரும்புவோர் சில விஷயங்களை கருத்தில் கொள்வது நல்லது.


சரியான வாடகை:
செல்ஃப் டிரைவ்க்கு கொடுக்கப்படும் கார்களுக்கு பெரும்பாலும் மணி நேர கணக்கில் வாடகை வசூலிக்கப்படுகிறது. வார இறுதியில் இது சற்று அதிகமாகதான் தெரியும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றோடு வாகனத்தை எடுத்தால் வாடகையும் அதிகமாக இருக்கும். அதிக தூரம் பயணித்தால் கணிசமான தொகை கூடுதலாகும். பெட்ரோலோ, டீசலோ நாம் போட்டுக்கொள்வதாக இருந்தால் வாடகை குறைவாக இருக்கும். எவ்வளவு தூரம் பயணம் செய்ய இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து பெட்ரோலுடன் வண்டி எடுப்பதா அல்லது பெட்ரோல் இல்லாமல் எடுப்பதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். நகரத்துக்குள் மற்றும் செல்வதாக இருந்தால் பெட்ரோலுடன் எடுப்பதே பலனளிக்கும்.


எவ்வகை கார்?
ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என்று வாடகை நிறுவனங்கள் பல்வேறு வகை கார்களை வைத்துள்ளன. கார் ஓட்டுவதில் இன்பம் காணவேண்டும் என்போர் பெரிய கார்களை எடுத்துக்கொள்ளலாம். மாறாக நடுத்தர நுகர்வோர், பயணிக்கப்போகும் நபர்களின் எண்ணிக்கை, கொண்டு செல்ல இருக்கும் சுமை, வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்ற வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம்.
எடுத்துக்காட்டாக, நான்கு நபர்கள் குறைவான சுமையுடன் நீண்டதூரம் பயணிக்கவேண்டும் எனில், நன்கு மைலேஜ் தரக்கூடிய, நாம் இயக்கக்கூடிய டீசல் காரை தேர்ந்தெடுக்கலாம். நகரத்தினுள் செல்ல வேண்டுமானால் ஆட்டோமெடிக் என்னும் தானியங்கி வகை கார்கள் உசிதம்.


ஏனைய செலவுகள்:
செல்ஃப் டிரைவ் கார்களை எடுக்கும்போது அந்நிறுவனங்கள் வாடகை மட்டும் வசூலிப்பதில்லை. காப்புத் தொகையும் கேட்பார்கள். வண்டியை திரும்ப கொடுக்கும்போது சேதம் ஏதும் இருந்தால், அதை காப்புத் தொகையில் பிடித்துக்கொள்வார்கள். அதிவேகமாக (ஓவர் ஸ்பீடிங்) காரை ஓட்டினால் சில நிறுவனங்கள் அபராதம் விதிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து அதிவேகமாக ஓட்டுவாரானால் அபராத தொகை உயரக்கூடும். இப்போதை நவீன தொழில்நுட்ப யுகத்தில் நீங்கள் காரை எந்த வேகத்தில் ஓட்டுகிறீர்கள் என்பதை நிறுவனங்கள் அறிந்துகொள்ள வழிவகை உள்ளது. ஆகவே, அனுமதிக்கப்பட்ட வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்குங்கள்.


பரிசோதித்து பயணம் செய்யுங்கள்:
செல்ஃப் டிரைவ் கார் எடுப்பது உங்களுக்கு முதன்முறையாக இருக்கலாம். வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் தவறுகள் செய்யமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இருந்தபோதும் காரை எடுப்பதற்கு முன்பு ஸ்டெப்னி (மாற்று) டயர், ஜாக்கி போன்றவை உள்ளனவா? பிரேக், எஞ்ஜின், மின்கலம் ஆகியவை நன்றாக வேலை செய்கின்றனவா என்பதை பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்..! தஞ்சையில் நடந்த பரபரப்பு நிகழ்வ

You'r reading செல்ஃப் டிரைவ் போகிறீர்களா? இவற்றை கவனியுங்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை