வேலூர் தேர்தல் முன்னணி நிலவரம் : முதல் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை

Vellore Lok Sabha election vote counting

by Nagaraj, Aug 9, 2019, 10:14 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் திமுக கூட்டணி கதிர் ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.


நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்றார்.. பின்னர் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம்:

கதிர் ஆனந்த் (திமுக): 34052

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 32511

தீபலட்சுமி (நாம் தமிழர்) : 520

You'r reading வேலூர் தேர்தல் முன்னணி நிலவரம் : முதல் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை