அருண் ஜெட்லி மறைவு ஓ.பி.எஸ்., தமிழிசை நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


டெல்லியில் நேற்று காலமான பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல், பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அருண்ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அருண் ஜெட்லி மறைவு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், பாஜகவிற்கும் பேரிழப்பு ஆகும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தவர். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் பாலமாக இருந்தவர் அருண் ஜெட்லி. அவருடைய மறைவு பேரிழப்பாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-bhanupriya-charged-for-physical-harassment-of-minor-girl
சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..
tamilnadu-muslim-leaque-request-govt-to-withdraw-the-g-o-banning-appointment-of-teachers-in-minority-institutions
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..
nampikkai-trust-conducted-free-sugar-test-medical-camp-in-viruthunagar
நம்பிக்கை அறக்கட்டளை நடத்திய சர்க்கரை நோய் மருத்துவ முகாம்..
first-dmk-general-council-meet-after-stalin-assumed-as-party-president-on-oct-6-in-chennai-ymca-ground
திமுக பொதுக்குழு அக்.6ல் கூடுகிறது.. உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை
heavy-rain-and-lethargic-work-of-corporation-affects-chennai-peoples-normal-life
சென்னையில் கனமழை.. மாநகராட்சி மந்தம்..
no-school-leave-for-heavy-rain-in-chennai
விடிய விடிய கனமழை.. ஆனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை!
will-rajini-speak-in-karnataka-about-common-lanquage-dmk-questions
கர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா? திமுக எழுப்பிய கேள்வி..
no-more-banner-culture-mkstalin-said
பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது.. ஸ்டாலின் பேட்டி
rajini-says-tamilnadu-and-many-states-will-not-accept-hindi-imposition
பொதுவான மொழி இருந்தால் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது.. ரஜினிகாந்த் கருத்து..
dmdk-urged-the-tamilnadu-government-to-conduct-local-body-elections-immediately
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்
Tag Clouds