தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரன் விலை ரூ.30,120 ஆனது: நடுத்தர மக்கள் பரிதவிப்பு

Advertisement

திருமண விழாகக்கள் நடைபெறும் ஆவணி மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன்(பவுன்) ரூ.30 ஆயிரத்து 120 ஆகி விட்டது. இதனால், நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர்.

நடுத்தர மக்கள் பெரும்பாலும் தங்கள் மகள் திருமணத்தின் போது தங்க நகைகளை வாங்குவார்கள். இப்போது ஆவணி மாதத்தில் ஏகப்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும். இந்நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே ேபாகிறது. இது திருமணங்களை நடத்தும் நடுத்த வர்க்கத்து பெற்றோரை கவலை கொள்ளச் செய்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது.

தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.50, ரூ.60 என உயர்ந்தது. மீண்டும் ஆக.7ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, சவரன் விலை ரூ.28,352க்கு விற்றது. பின்னர், ஆகஸ்ட் மாதம் முழுவதுமே கிராமுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் உயர்ந்து கொண்டே வந்தது.

ஆகஸ்ட் 30ம் தேதியன்று கிராம் ரூ.3689க்கும், ஆக.31ம் தேதியன்று கிராம் ரூ.3691க்கும், செப்.2ம் தேதியன்று கிராம் ரூ.3695க்கும் விற்றது. நேற்்று(செப்.3) காலையில் கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.3718 ஆனது. சவரன் விலை ரூ.29,744 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.47 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3765 ஆனது. அதாவது ஒரு பவுன் விலை ரூ.30,120 ஆக விற்கிறது.

இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அதற்கு ஏற்ப இங்கும் விலைகளில் மாற்றம் காணப்படுகிறது. கடத ஒரு மாதமாகவே தங்கம் விலை உயர்ந்து ெகாண்டே வருகிறது. கடந்த 40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 3,640 அதிகரித்துள்ளது என்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>