ஊராட்சி தேர்தலில் வென்றவர் மரணம்..

by எஸ். எம். கணபதி, Jan 3, 2020, 13:04 PM IST

ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் சில மணி நேரங்களில் மரணம் அடைந்தார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக டிச.27, 30 தேதிகளில் நடைபெற்்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று(ஜன.2) தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மணிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல், கட்சி சார்பற்று நடத்தப்படுகிறது. ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற மணிவேல் தனக்கு அடுத்த வந்த வேட்பாளரை விட 163 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், 65 வயதான மணிவேல் நேற்று திடீர் மரணம் அடைந்தார். வெற்றி பெற்ற சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தது அந்த கிராமத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

READ MORE ABOUT :

More Tamilnadu News