தமிழக அரசின் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது

by எஸ். எம். கணபதி, Jan 9, 2020, 09:49 AM IST

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பை விநியாகிக்கும் பணி தொடங்கியுள்ளது.


இந்த ஆண்டு பொங்கலையொட்டி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்தார். எனினும், உள்ளாட்சி தேர்தல் காரணமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியிருக்கிறது.


பொங்கல் பரிசு பையில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை இருக்கும். இத்துடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் தரப்படுகிறது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு இது வரை வாங்காதவர்கள், ரேஷன் அட்டையில் பெயர் உள்ள ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் 'பாஸ்வேர்டு' அடிப்படையில் பொங்கல் பரிசை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு விநியோகம் 12ம் தேதி வரை நடைபெறும்.

Get your business listed on our directory >>More Tamilnadu News

அதிகம் படித்தவை