எதிர்ப்பு பேனருடன் சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 11:41 AM IST

காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேனருடன் சட்டசபைக்கு தமிமுன் அன்சாரி வந்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மீதான பொது விவாதம், சட்டசபையில் இன்று தொடங்கியது.

முன்னதாக, சட்டசபைக்கு வந்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கையில் ரு பேனருடன் வந்தார். அதில், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை கண்டிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமன்று கோரி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதையொட்டி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளன. அதே போல், தமிமுன் அன்சாரியும் தனியாக தீர்மானம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

Leave a reply