என்.ஆர்.சி.க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்.. ராமதாஸ் வலியுறுத்தல்

by எஸ். எம். கணபதி, Feb 27, 2020, 13:45 PM IST

பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC)-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :
பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC)-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிமொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தற்போது முஸ்லிம்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை ஆதரித்து அதிமுகவும், பாமகவும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading என்.ஆர்.சி.க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்.. ராமதாஸ் வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை