திருநெல்வேலி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வரும் 22ம் தேதி தேசிய கருத்தரங்கு

Advertisement

திருநெல்வேலியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் வரும்22ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், மருதகுளம் பகுதியில் அமைந்துள்ளது நேஷனல் பொறியியல் கல்லூரி. இங்கு, பொறியியல் தொடர்பான பல்வேறு துறைககளின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கணினி அறிவியல் (CSE) துறை சார்பில்மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்என்ற தலைப்பின் கீழ் வரும் 22ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லூரி, பல்கலைகழகங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்த கருத்தரங்கில், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏஐசிடிஇ அனுமதி பெற்ற கல்லூரிகள் மற்றும் யுஜிசி அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கருத்தரங்கில், கட்டுரை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான, பதிவுக் கட்டணமாக, கட்டுரை வழங்கும் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.300ம், முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.500ம் வசூலிக்கப்படுகின்றனஇதேபோல், போஸ்டர் பிரசன்டேஷனுக்காக பங்கேற்கும் இளங்கலை மாணவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான பதிவுக் கட்டணத்தை,“The Principal, National College of Engineering” என்ற பெயரின் கீழ், டிமாண்ட் டிராப்ட் (டிடி) மூலம் செலுத்தலாம். அல்லது, நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட் பாங்கிங்குக்கான முழு விவரம் மேற்கொண்டு உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கான கட்டுரைகளை சமர்ப்பிக்க, வரும் 12ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகள், 14ம் தேதி தேர்வு செய்யப்படும். இது குறித்து இமெயில் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள பதிவுசெய்வதற்கான கடைசி நாள் 19ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு - http://www.nce.ac.in/acta

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>