மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், நீண்ட காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஆக.7ம் தேதி மரணம் அடைந்தார். இன்று அவரது 2வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்படப் பலரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி அமைதிப் பேரணி நடத்தப்படவில்லை.