சென்னையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வழங்கினர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநிலம் முழுவதும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டப் பிரிவு சார்பில் கொளத்தூர் தொகுதியில் சிவசக்தி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்துடன், வானத்தின் வாசல் எனும் மகளிர் சுய உதவிக் குழுவிற்குச் சிற்றுண்டி கடை நடத்துவதற்குத் தேவையான தள்ளுவண்டி, கேஸ் ஸ்டவ், அனைத்து சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் 40ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் மற்றும் 50 ஏழைக் குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பிரியதர்ஷினி உதயபானு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர்கள் பிரவீன்குமார், நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கட்சியின் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்சியின் கொடியேற்றி வைத்தார்.
பின்னர், சுய உதவிக்குழு பெண்களுக்குச் சிற்றுண்டி கடை நடத்துவதற்கான வாகனம் மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்கி உணவக தொழிலில் சிறந்து விளங்கிட வாழ்த்தினார். 50 ஏழை குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது.கொளத்தூர் நகரச் செயலாளர் ஆர்.திவாகர் மற்றும் வெங்கட் கமல் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆதிதிராவிடர் நல அணி மாவட்டச் செயலாளர் ராமனாதன், ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் பிரியங்கா, கொளத்தூர் நகரச் செயலாளர்கள் கிறிஸ்டோபர் கிஷோர் வின்சென்ட், கென்னி ஜான்சன்டிக்ரூஸ், ராஜேந்திரன், வட்டச் செயலாளர்கள் சுரேஷ், சிலம்பரசன், தொழிலாளர்கள் அணி நகரச் செயலாளர் தினகரன், வில்லிவாக்கம் நகரச் செயலாளர்கள் ஜிம்.கே.மாடசாமி, தமிழரசி மற்றும் பாலமுருகன், சுந்தர், பரமகுரு, புருஷோத்தமன், சேகர், சந்தானலட்சுமி, சுமதி ராஜசேகரன், ஜெகதீசன், அமிர்த ராஜ், பிரபாகரன், சையத் இப்ராஹிம், சீனு, பொன்ராஜ், ஜெகன்மோகன், சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.