சென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் கோவை.. 12 மாவட்டங்களில் பரவும் கொரோனா..

corona cases in 12 districts in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Sep 27, 2020, 09:30 AM IST

தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல், 2வது இடத்திற்கு கோவை வந்து விட்டது. இங்கு நேற்று(செப்.26) ஒரே நாளில் 656 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. எனினும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு நேற்று (செப்.26) இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5647 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 75,017 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.


எனினும், குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5612 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 19,448 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 85 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 9233 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்களில் தினமும் புதிதாக 150 பேருக்கு குறையாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில் தொற்று பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 1182 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 62,125 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 259 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 235 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 34,168 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,449 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.


கோவை மாவட்டத்தில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், ஈரோட்டில் 140 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும், விழுப்புரத்தில் 161 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 92,166 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 67 லட்சத்து 93,843 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading சென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் கோவை.. 12 மாவட்டங்களில் பரவும் கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை