தசரா விழாவில் பத்ரகாளி வேஷம் போட்ட நடிகர்கள்.. குலசேகரபட்டனத்தில் பரபரப்பு..

Arithiyil Shooting at Kulseakarapattinam Dhsara Festivel

by Chandru, Oct 21, 2020, 14:29 PM IST

தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உலகளவில் பிரபலம். பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா. 'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார்.குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள். தசராவுக்கு முந்தைய இரவு, பண்டையகால பெண் கடவுளான சக்தி, எல்லா இருள்களையும் அழிக்கும் இரவு. தமிழ்நாட்டில் உள்ள இந்த கடற்கரை கிராமத்தில் இந்த நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடுகின்றனர்.

அவர்கள் தங்கள் வலியை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சவால்களை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் தவத்தை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் நம்பிக்கையை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் தீய எண்ணங்களை அழிக்க வந்துள்ளனர். இதைச் செய்ய அவர்கள் மாற வேண்டும். அவர்கள் அந்த பெண் கடவுளாக மாறவேண்டும். அவர்கள் தங்கள் தோல்களில் வர்ணம் பூசி, அவளது பல அவதாரங்களாக மாறுகின்றனர். பின்னர் அவர்கள் உடல் நடுங்கும் ஒரு நிலைக்கு, பண்டைய சக்திக்கு அடிபணிவார்கள். பெருங்குழப்பம் மற்றும் சரணடைதல் நிறைந்த ஒரு இரவுக்கு பிறகு அவர்கள் ஒரு புத்தம் புதிய காலையை எதிர்கொள்கிறார்கள். ஒரு புதிய தொடக்கம். இது தான் குலசேகரப்பட்டினம். இதனை, 20 வயது நிரம்பிய தமிழ்மாறன் தனது 40 நாட்கள் தவத்திலிருந்து விடுபடுகிறார்.

அவர் தனது தோலில் நீல நிறத்தை பூசிக் கொள்கிறார். அவருடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பூசிக் கொள்கின்றனர். பண்டையகால சக்தியிடம் சரணடைய அவர்கள் தயாராகின்றனர். தமிழ்மாறனைப் போல, லட்சக்கணக்கான பக்தர்கள் தசராவின் 10 நாட்களின் போது குலசேகரப்பட்டினத்துக்கு வருகை புரிகின்றனர். தங்கள் பாவங்களையும் துயரங்களையும் பண்டையகால சக்தியான பத்ரகாளியிடம் சரணடையச் செய்கின்றனர். வெளிப்படும் அந்த பெண் கடவுளால் அவை சுத்தப்படுத்தப்படுகின்றன.

பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம் பரியத்தை படமாக்குகிறது. இது குறித்து பரத்பாலா கூறும்போது, “என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார். தசரா விழாவில் நடிகர்கள் பத்ரகாளி வேடம் போட்டது திருவிழாவில் பங்கேற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading தசரா விழாவில் பத்ரகாளி வேஷம் போட்ட நடிகர்கள்.. குலசேகரபட்டனத்தில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை