ஸ்ரேயா கோஷல் போதை குரலில் ஒரு காதல் பாட்டு..

jayam ravi Bhoomi Song release kadaiknnaale

by Chandru, Oct 21, 2020, 14:40 PM IST

ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் பூமி படத்தை இயக்கி உள்ளார் லக்‌ஷ்மன். விவசாயிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் இடையே நடக்கும் போராட்ட பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஞ்ஞானி ஒருவன் கார்ப்ரேட்களின் ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து போராடும் கதையாக இது உருவாகி இருக்கிறது.

அடிமையாக இருக்கறது தெரியாத வரைக்கும் தான் உங்கள மாதிரி ஆளுங்க இங்க இருக்கமுடியும் தெரிஞ்சதுன்னா? என்று கடும் எச்சரிக்கை வசனங்கள், ஆக்‌ஷன் காட்சிகள், காதல், போராட்டம் எனப் பலவித உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஜோடியாக அறிமுகமாகிறார் மும்பை அழகி நிதி அகர்வால்.இப்படத்தில் இடம் பெறும் கடைக்கண்ணாலே.. என்ற பாடல் ஷ்ரேயா கோஷல் குரலில் டி.இமான் இசையில் வெளியாகி இருக்கிறது.

ஷ்ரேயா கோஷலின் போதை ஏற்றும் மெலடியாக இப்பாடல் பதிவாகி ரம்மியமாக செவிக்குள் நுழைகிறது.ஜெயம் ரவி அடுத்து மணிரத்னம், இயக்கும் பொன்னியின் செல்வன், மோகன்ராஜா இயக்கும் தனிஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை