நாகர்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் புகார்‌

Advertisement

நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வசந்தகுமாரின் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்குள்ள ஒழுங்குமுறை விற்பானைக்கூட வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நடந்தது. திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். திட்டமிட்டே அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களைக் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார்‌ தெரிவித்துள்ளனர்

Advertisement

READ MORE ABOUT :

/body>