தமிழகத்தில் தயாராகி வரும் திரையரங்குகள்

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு படங்களைத் திரையிட தமிழகத்தில் திரையரங்குகள் தயாராகி வருகிறது

by Balaji, Nov 3, 2020, 11:07 AM IST

கொரோனா தொற்று காரணமாகத் தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் திருமண வைபவங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் அரசு சில தளர்வுகள் உடன் அனுமதி அளித்து வந்த நிலையில் திரையரங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வை அளிக்கவில்லை.இந்த நிலையில் இம்மாத இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட தமிழக அரசு கடந்த அக்டோபர் 31-ந் தேதி பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது.

இதன்படி வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 10-ந் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. 7 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுக் கிடப்பதால், தூசி படிந்தும், சேதமடைந்தும் உள்ள இருக்கைகளைச் சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுதல், புரொஜெக்டர் களை சுத்தம் செய்தல், சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் தயாராகி வரும் திரையரங்குகள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை