நடிகருடன் சண்டைக்கு கேப் விட்டு டப்பிங்கிற்கு திரும்பிய ஹீரோ..

by Chandru, Nov 3, 2020, 11:29 AM IST

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி பிறகு வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பண மோசடி விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தந்தை முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா. இவர் மீதும், மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீதும் நடிகர் சூரி பண மோசடி வழக்கு தொடர்ந்தார். நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சைதாப் பேட்டை கோர்ட் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில்,என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூரி தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகக் கூறியிருந்தார். தற்போது அவர் தனது உழைப்பெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே என்று மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மோசடியால் நான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பணத்தைத் திருப்பி தருகிறேன் இதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறியிருந்தார்கள். 2 வருடம் பொறுமையாக காத்திருந்தேன் . இதனால் அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. இதனால் மன உளைசலுக்குள்ளாகி இருக்கிறேன். நான் பட்ட கஷ்டம், எனது திறமை எல்லாவற்றையுமே வீணாக தொலைத்து விட்டேன். இப்போது நீதிமன்றத்தை நம்பி இருக்கிறேன் என்றார். இதையடுத்து விஷ்ணு விஷால் தந்தை மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தர விட்டது. விஷ்ணு விஷால் தந்தை ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டுக்கு சூரி விவகாரம் சென்றதையடுத்து அது தற்போது வழக்கறிஞர்கள் மோதலாகி விட்டது. இதையடுத்து விஷ்ணு விஷால் தனது படங்களில் கவனத்தைத் திருப்பி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு, சூரியுடன் மோதல் எனப் போராட்டத்துக்கு பிறகு விஷ்ணு, தான் நடித்து வரும் எஃப் ஐ ஆர் படத்தின் டப்பிங்கில் நேற்று முதல் பங்கேற்றார். அதற்கான வீடியோவும் வெளியிட்டார். அதில் மீண்டும் பணிக்கு வந்து விட்டேன் விரைவில் சந்திக்கலாம் என்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை