கொரோனா சிகிச்சையில் 18 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் சரிவு..

சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு குறையத் தொடங்கி, அக்.12ம் தேதி 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதைத் தொடர்ந்து, புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து தற்போது 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது.

நேற்று(நவ.7) 75,384 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2334 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 பேராக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2386 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 13,584 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 20 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,344 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைந்தவர்களுக்கே பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 601 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 120 பேர், திருவள்ளூர் 133, காஞ்சிபுரம் 89, கோவையில் 205, ஈரோடு 103, திருப்பூர் 119, சேலம் மாவட்டத்தில் 102 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை 2 லட்சத்து 4863 பேருக்கும், செங்கல்பட்டில் 44,849 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 38,893 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,216 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 5 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் பரிசோதனை எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :