கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. சென்னையில் குறைகிறது..

Advertisement

தமிழகத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. சென்னையில் புதிய பாதிப்பு 400க்கு கீழ் சென்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பரவியிருக்கிறது. இந்நோய்க்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

தமிழக அரசின் அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று(நவ.26) 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1467 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 76,174 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1797 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 53,332 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 14 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,173 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 396 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நேற்று 158 பேருக்கு தொற்று பாதித்தது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கும், திருவள்ளூர் 67, காஞ்சிபுரம் 43, சேலம் 93, ஈரோடு 84, திருப்பூர் மாவட்டத்தில் 71 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே நேற்று தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 13,801 பேருக்கும், செங்கல்பட்டில் 47,231 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,668 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,462 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>