தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் ?

தமிழக சட்டசபைக்கு வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

by Balaji, Nov 30, 2020, 13:58 PM IST

உலகம் கேரளம் புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில்
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஊரடங்கு முடிவடைந்ததும் அநேகமாக அடுத்த மாதம் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் அனைத்து பணிகளும் கடந்த சில மாதங்களாக முடங்கி உள்ள நிலையில், தற்போது படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகளால், தேர்தல் தொடர்பான வேலைகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள், மூன்று தேர்தல் ஆணையர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே அதாவது, வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

வரும் டிசம்பர் இரண்டாம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. துணை தேர்தல் கமிஷனர் சந்தீப் ஜெயின், வரும் டிசம்பர் 9 -ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை