கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி!

Advertisement

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறது. இதன் மூலமாக சணல் பை மற்றும் இதர பொருட்கள் தயாரித்தல் 13 நாள் பயிற்சி வரும் டிச., 16ம் தேதி காலை 9:30 மணியளவில் துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கு கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். இதற்கு வயதாக ஆண், பெண் இருவருக்கும் 18 வயது முதல் 24 வயதும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு அலமேலுபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை நேரிலோ அல்லது 04146 227115 அல்லது 7598466681 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>