ஜெயலலிதாவை கொன்றது யார்... நினைவு நாளில் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!

by Sasitharan, Dec 5, 2020, 18:57 PM IST

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு நான்காண்டு ஆகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும், அவரது விசுவாசிகள், அவரின் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உட்பட கட்சியினர் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் காலை முதலே இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வந்தன. அதேபோல், #அம்மா, #jayalalithaa போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில், #WhoKilledJayalalitha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவை இறப்பில் உள்ள விலகாத மர்மம், ஆறுமுகசாமி ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த ஹேஷ்டேக் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்திய அளவில் இடம்பிடித்துள்ள இந்த #WhoKilledJayalalitha என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இதுவரை 16 ஆயிரம் டுவீட்களை பதிவிட்டுள்ளனர்.

You'r reading ஜெயலலிதாவை கொன்றது யார்... நினைவு நாளில் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை