குடிமராமத்து என்ற பெயரில் என்ன செய்தீர்கள்? பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்று இணையதளத்தில் பதிவேற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

by Balaji, Dec 15, 2020, 17:16 PM IST

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின்
விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, தூர்வாருவது போன்ற பணிகளை மேற்கொள்ளக் குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் கீழ் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்காக 2019ஆம் ஆண்டு 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது போதுமான அளவு மழை பெய்தாலும், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்குக் காரணம் . ஆகவே தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இது குறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You'r reading குடிமராமத்து என்ற பெயரில் என்ன செய்தீர்கள்? பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை