30 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 20க்கும் கீழ் சரிந்தது..

by எஸ். எம். கணபதி, Jan 11, 2021, 10:00 AM IST

தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வேகமாகப் பரவிய கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நேற்று(ஜன.9) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 63 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 724 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 26,261 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 857 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 6875 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 7 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,222 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7164 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் 208பேர், கோவையில் 76பேர், சேலத்தில் 48, திருவள்ளூர் 36பேர் மற்றும் செங்கல்பட்டு 40 பேர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தலா 27 பேருக்கும் நேற்று புதிதாகத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற 30 மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை