மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகப் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று துவங்கியது. ஆனால் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பொதுமக்களையும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த பணிகள் நடந்தது. இதை அறிந்த எம்.பி. வெங்கடேசன் அங்கு வந்து
மருத்துவமனை முதல்வர் மற்றும் பொறியாளர்களை அழைத்துக் கட்டிட இடிப்பு பணிகளை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரே பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின்னரே இடிக்கும் பணிகளைத் துவங்குவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் சார்பில் எம்.பி. இடம் உறுதி அளித்துள்ளனர்.