சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மட்டுமே புதிய கொரோனா பாதிப்பு..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய் ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. தினமும் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது.

தற்போது சென்னை, கோவை உள்பட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை. இதனால், இருதய நோய் உள்ளிட்ட வேறு நோய்ப் பாதிப்பு உள்ளவர்களும், முதியோர்களும்தான் முகக்கவசம் அணிந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.தமிழக அரசு நேற்று(பிப்.14) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 470 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 45,120 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 479 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 28,441 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 6 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,419 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4260 ஆகக் குறைந்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்திலும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவது நீடிக்கிறது.சென்னையில் நேற்று புதிதாக 140 பேருக்கும், கோவையில் 45 பேர், செங்கல்பட்டில் 43 பேருக்கும், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் தலா 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 20க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று புதிய பாதிப்பு எதுவும் இல்லை.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :