இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுபொருளான குஷ்பு! காரணம் என்ன தெரியுமா?

Advertisement

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, பெண்களை காலம் காலமாக பேசுவதே திமுகவின் கொள்கை என குற்றம்சாட்டியுள்ளர்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பும் நாள்தோறும் தவறாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று கிரியாப்பா சாலை, தாமஸ் சாலை, குடிசை மாற்று வாரியம் பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தார். தொகுதி மக்களை சந்தித்த குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

குஷ்பு அளித்த தேர்தல் வாக்குறுதியில்,

1. ஆயிரம் விளக்கு தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும்

2. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வந்து கொடுக்கப்படும்

3. ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்

3. கர்ப்பிணிப் பெண்களை மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு வார்டிற்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும்

4. இளம்பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்

5. நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்படும்

6. இஸ்லாமிய பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு குறு தொழில்கள் தொடங்க நிரந்தர வருமானம் பெற வழிவகை செய்யப்படும்

7. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

8. நூலகங்கள் நவீன மயமாக்கப்படும்

9. மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்

10. ஆதரவற்ற முதியவர்களுக்கு காப்பகம் அமைக்கப்படும்

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ஆயிரம் விளக்கு பகுதியில் குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை , பிரச்சனை, வீட்டுமனை பட்டா இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக புகார் தெரிவித்ததாகவும் கூறினார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர் தங்களது ஆட்சி காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதிமுக, பாஜகவை எதிரி எனக்கூறும் திமுக மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை திமுகவினர் தடுப்பதாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர் பெண்களை அவமானமாகபடுத்துவதும், இழிவாக பேசுவதும், திமுகவின் அடிப்படை கொள்கை என்றும், அதனால் தான் திமுகவில் இருந்து வெளியே வந்ததாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>