ஐபேக்கின் ரிப்போர்ட் திமுகவின் முடிவு – சபாநாயகர் தேர்வில் புது முயற்சி!

by Madhavan, Apr 27, 2021, 11:57 AM IST

திமுக ஆட்சி அமைத்தால் அடுத்தடுத்து யாருக்கு பொறுப்பு வழங்கலாம் என்பது குறித்த விவாதங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன. அந்த வகையில் சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதத்தில் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்புலட்சுமி ஜெகதீசனை டிக் செய்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறது திமுக வட்டாரங்கள். திமுகவின் இப்போதைய துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் ஒருவர்.

ஐபேக் சுப்புலட்சுமி ஜெகதீசனைப் பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்திருந்ததோடு அவரைப் போன்ற அனுபவம்மிக்கவர்களை திமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் விருப்ப மனுவே கொடுக்காத நிலையிலும் ஸ்டாலின் அவரை தேர்தலில் போட்டியிட வைத்தார்.

Aval Vikatan - 26 May 2020 - அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு! |Political women shares lock down experience

நீண்ட அரசியல் அனுபவத்தைக் கருத்தில்கொண்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அடுத்து அமையும் திமுக ஆட்சியில் சபாநாயகர் பதவி அளிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொங்கு மக்களுக்கு திமுகவின் சார்பில் மரியாதை செய்த மாதிரியும் இருக்கும், தமிழ்நாட்டில் இதுவரை பெண்கள் சபாநாயகர் பதவியை அலங்கரித்ததே இல்லை. எனவே ஒட்டுமொத்தமாக பெண் இனத்தையும் மரியாதை செய்த மாதிரி இருக்கும் என்பதால் சுப்புலட்சுமி ஜெகதீசனை சபாநாயகர் ஆக்கலாம் என்ற திட்டம் ஸ்டாலினிடம் இருக்கிறது.

1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல் முறை ஆட்சி அமைத்தபோது மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் வெற்றிபெற்று எம்ஜிஆர் அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், பிறகு திமுகவில் இணைந்தார். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அடிப்படையில் ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்டவர்.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் திமுகவினர் உள்ளிட்ட பலர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். சுமார் ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த சுப்புலட்சுமி பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

You'r reading ஐபேக்கின் ரிப்போர்ட் திமுகவின் முடிவு – சபாநாயகர் தேர்வில் புது முயற்சி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை