மேட்டூர் அணை தனது முழு கொள்ளளைவை எட்ட உள்ளதால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.3 ஆகப் பதிவாகி உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயருவதால் தான் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணையின் மொத்த கொள்ளவு 120 அடி ஆகும்.
ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117 அடியாக உயர்ந்துவிடுகிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கண அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கர்நாடகா அணைகளிலிருந்து மணிக்கு 60 கண அடி நீர் நிரம்பி வருகிறது.
இதையடுத்து இன்று மேட்டூர் அணைப் பகுதியில் வெள்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை மேட்டூர் அணை அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தற்போது சேலம் ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது.
காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.