வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்த
ஹீலர் பாஸ்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அண்மையில் திருப்பூரில் யுடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதற்கு காரணமான அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள கோவையில் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் ஒரு போஸ்டர் உலா வந்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது.
அந்த முகாமை சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும், மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த நிஷ்டை அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.