குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 24 மணிநேரத்துக்கு மத்திய மற்றும் வட வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.