வீடியோவை ஜெயலலிதா தான் எடுக்க சொன்னார்: நாஞ்சில் சம்பத் அதிரடி

வீடியோவை ஜெயலலிதா தான் எடுக்க சொன்னார் என்று டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Jayalalithaa and Nanjil Sampath

இதுகுறித்து நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்றால், அரசியல் ஆதாயம் தேடுவது ஒன்றும் பாவமில்லை. பாவமான காரியமில்லை. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக இப்போது வெளியிடப்படவில்லை” என்றார்.

மேலும், “மருத்துவமனையில் ஜெயலலிதாவே எடுக்க சொன்னார். நலம் பெற்று வந்த பின்னர் நானே பார்க்க வேண்டும் என்று சொன்னார். இந்த வீடியோவை வெளியிடுவோம் என்று ஏற்கனவே மதுரையில் பெங்களுரு புகழேந்தி அறிவித்தார்.

அந்த வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது என்பதை ஜெயா தொலைக்காட்சி செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இன்றைக்கு வெற்றிவேல் வெளியிட்டிருக்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.