கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கத்தொகையை இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2லு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஒப்புதலோடு கவர்னர் கிரண்பேடி 14.9.2017 முதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2லு லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி அரசாணை எண். 02/2018-19 கீமீறீ(ஷிசிகீ), 07.09.2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.