இளம்பெண் சர்ச்சையில் சிக்கினாரா அமைச்சர் ஜெயக்குமார்!

Advertisement

தமிழக அமைச்சர்களிலேயே மிக உச்ச உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார் அவரை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்டுள்ளது நேற்று வெளியாகி வைரலாகியுள்ள ஆடியோ ஒன்று.

அமைச்சர் ஜெயக்குமார் சொந்தக்குரலில் பேசும் அந்த ஆடியோவில் வழக்கத்துக்கு மாறாக வயதான பெண்ணிடம் பம்முகிறார். பல இடங்களில் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் தட்டுத்தடுமாறுகிறார். பொதுவாக டிவி பேட்டிகளில் விறகு பிளப்பதுபோல் எதுகைமோனையோடு, எதிரிகளைப் பந்தாடும் ஜெயக்குமாரின் பேச்சா இது என்று யோசிக்குமளவுக்கு அந்த ஆடியோவில் பம்முகிறார்.

அமைச்சர் மற்றும் அந்தப்பெண் பேசிய ஆடியோவின் சாராம்சமே ஜெயக்குமாருக்கும் அந்தப்பெண்ணின் மகளுக்கும் இடையே எப்போதோ ஏற்பட்ட பழக்கத்தில் கரு உருவாகிவிட்டது என அந்தப்பெண்ணே அடிக்கடி கூறுகிறார். இந்த ஆடியோ நேற்று வெளியானது முதலே அரசியல் அரங்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த விசயத்தை பூடகமாக வைத்துத்தான் பிரபல செய்தி சேனலுக்கு அளித்தபேட்டியில் தினகரன் அணியின் வெற்றிவேல் ஒரு எம்பிக்கு தம்பி பிறக்கப்போகிறான் என்கிற தகவலைச்சொல்லியிருந்தார்.

அதிமுக அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல். ஆனால் சமீபத்தில் ’எம்.பி. ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது. அப்போ எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க! அந்த குழந்தைக்கு முறைப்படி சேரவேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுத்திடுங்க. இல்லேன்னா ரகசியம் உடைபடும், சொல்லிட்டேன்.’ என்று ஒரு அணுகுண்டை கொளுத்திப் போட்டார்.

இந்நிலையில், நேற்று வாட்ஸ் அப்பில் வைரலான அந்த ‘பிறப்புச் சான்றிதழ்’ தமிழக அரசியலை தெறிக்க விட்டிருக்கிறது.

ஆம் தமிழக அமைச்சர் டி ஜெயக்குமாருக்கும் - ஜெ சிந்து என்கிற பெண்மணிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விபரம் சொல்கிறது அந்த அறிக்கை. கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதியன்று, சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உள்ள ஜெயம் நர்ஷிங் ஹோமில் இந்த குழந்தை பிறந்துள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுகின்றன.

ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளை சமாளிக்கமுடியாமல் திணறிவரும் வேளையில், ஒரு அமைச்சரே இவ்வளவு மலிவான சர்ச்சையில் சிக்கியிருப்பது முதல்வர் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது. ஆனால் இது குறித்து அமைச்சர் தரப்பு எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>