தமிழகத்தின் 11 உள்மாவட்டங்களே உஷார்! உஷார்! கனமழை பெய்யுமாம்!

IMD wars heavy rain in North TN

by Mathivanan, Nov 23, 2018, 08:01 AM IST

தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிவிட்டு அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது கஜா புயல். இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் மீண்டும் கடந்த 18-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஏற்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து 11 உள்மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்குதான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

You'r reading தமிழகத்தின் 11 உள்மாவட்டங்களே உஷார்! உஷார்! கனமழை பெய்யுமாம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை