நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை நடைபெறுவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.
ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளில் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கஜா புயல் நிவாரண பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்று சென்னை திரும்பினார். அப்போது ரஜினிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.
இத்தகவல் வெளியே பரவாமல் இருக்க அவருக்கு வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனராம். ரஜினிக்கு ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி வதந்திகள் சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டி பறக்கிறது. இது குறித்து ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, ரஜினிக்கு சாதாரண காய்ச்சல்தான்.. அதற்குதான் காது மூக்கு வைத்து பேசுகிறார்கள் என்கின்றனர்.