உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! Exclusive

DMK alliance with Vaiko Break up, Thirumavalavan in Edappadi team

Nov 24, 2018, 13:06 PM IST

கருணாநிதியின் ஓய்வின் போதும் அவரது மறைவுக்குப் பிறகும், வைகோவிடம் நெருக்கம் பாராட்டினார் ஸ்டாலின். இந்த நெருக்கம் ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறும் என ஸ்டாலினே சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு வந்து நின்றது. இதனை வைகோவிடம் உறுதியும் படுத்தினார் ஸ்டாலின்.

இதனை நம்பிய வைகோ, திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பதைப் பாராட்டியும், ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர்த்தாமல் ஓய மாட்டேன் என்றும் உரத்து குரல் கொடுத்தார். இனி வரும் தேர்தலில் மதிமுகவுக்கு அரசியல் வெற்றி கிடைக்காமல் போனால் மதிமுகவில் தன்னைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை வைகோவே உணர்ந்திருந்ததால் திமுக கூட்டணியில் மதிமுக இருக்கும் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்ததில் வைகோவுக்கு ஏக சந்தோசம்.

அதனால் தான், ஸ்டாலின் புகழ் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், சமீபகாலமாக வைகோவிடம் ஸ்டாலின் முகம் கொடுப்பதில்லை. அதனால் வைகோ அப்- செட்டாகியிருக்கிறார் என்கின்றன திமுகவின் உள் வட்டங்கள்.

தேர்தல் குறித்து சமீபமாக எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள், திமுக தனித்து போட்டியிட்டாலே 35 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என சொல்வதும், அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என சொல்வதும் ஸ்டாலினையும் அவரது கிச்சன் கேபினெட்டையும் பரவசப்படுத்தி வருகிறது.

இதனால், ஏற்கனவே கூட்டணியிலிருந்து சிறுத்தைகளை வெளியேற்றுமாறு தனக்கு வரும் அழுத்தத்தை ஆராய்ந்து வரும் ஸ்டாலின் சிறுத்தைகளிடம் பாராமுகம் காட்டி வருகிறார். தற்போது, வைகோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்டாலின். அன்மையில், சந்திரபாபுநாயுடு - ஸ்டாலின் சந்திப்பு குறித்து விபரமறிய ஸ்டாலினிடம் பேச விரும்பியுள்ளார் வைகோ.

ஆனால், அதை தவிர்த்துள்ளார் ஸ்டாலின். அதேபோல, பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை வலிமைப்படுத்தும் அரசியலில், பாஜக எதிர்ப்பு அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்த திட்டமிட்ட சந்திரபாபு நாயுடு. அதற்கான கூட்டத்தை டெல்லியில் நடத்த திட்டமிட்டு அதனை தற்போது ஒத்திவைத்துள்ளார். விரைவில் அந்த கூட்டம் டெல்லியில் நடக்கவிருக்கிறது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் சம்மதம் தந்திருக்கிறார்.

பொதுவாக, அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் திமுகவின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் தனது தோழமைக் கட்சிகளையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் பழக்கத்தை வைத்திருந்தவர் கருணாநிதி. அந்த பாணியில், சந்திரபாபு நாயுடு ஏற்பாட்டில் நடக்கும் அரசியல் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் நிலையில் மதிமுகவும் அதில் கலந்துகொள்ளும் வகையில் தம்மையும் அழைத்துச் செல்ல ஸ்டாலின் விரும்புகிறாரா என்பதை அறியவும் நிணைத்துள்ளார் வைகோ.

ஆனால், அதற்கும் ஸ்டாலின் தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸாம். இவைகளால் வைகோ அப்செட்டாகியுள்ளாராம். அதனால், திமுக கூட்டணியில் மதிமுகவை ஸ்டாலின் சேர்த்துக்கொள்வாரா? என்ற சந்தேகம் மதிமுக தொண்டர்களிடம் எதிரொலிக்கிறது. ஸ்டாலினின் பாராமுகத்தால் திமுக மீது வெறுப்பில் இருக்கும் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், அதிமுக கூட்டணி அல்லது தினகரனுடன் கூட்டணி என்கிற ரீதியில் ஆப்சனை ஓப்பன் பண்ணி வைத்துள்ளார்.

அதற்கேற்ப, எடப்பாடியை சந்தித்து நிவாரண நிதியளித்த கையோடு, மக்களின் முதல்வர் எடப்பாடி என வர்ணித்துள்ளார் திருமாவளவன். ஆக, திமுக கூட்டணியில் சுருதி பேதங்கள் சத்தமில்லாமல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

-எழில் பிரதீபன்

You'r reading உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை