அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன்... கொங்கு அமைச்சர்களிடம் குதூகலித்த எடப்பாடி- Exclusive

Advertisement

திருமாவளவனைக் கழட்டிவிட்டால் போதும் - கூட்டணியைக் கெடுக்கும் திமுக உடன்பிறப்புகள் EXCLUSIVE

அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன் இடம்பெறுவது உறுதி என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் குதூகலமாக கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த கட்சிகள் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளும் வைகோவின் மதிமுகவும். ஆனால் திமுகவின் மூத்த நிர்வாகிகளோ இரு கட்சிகளையுமே விரும்பவில்லை.

திருமாவளவன் கூட்டணியில் இருந்தால் வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்பது திமுக மூத்த நிர்வாகிகள் கருத்து. அத்துடன் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நேரத்தில் விலைபோகிறவர்கள் என்கிற கருத்தும் அவர்களிடம் இருக்கிறது.

இதனால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இதனால்தான் காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கம் காட்ட போராடினார் திருமாவளவன். ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி என்கிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுகவா? அமமுகவா? என்கிற இரு வாய்ப்புகள்தான் உண்டு.

அமமுகவின் துணை பொதுச்செயலர் தினகரன், பணம் விசயத்தில் படுகறார் என்பதால் வேறுவழியில்லாமல் அதிமுக கூட்டணிக்கு துண்டை போட்டு வைத்துவிட்டார் திருமாவளவன். இதனால்தான் எடப்பாடி பழனிசாமியை மக்களின் முதல்வர் என பாராட்டினார் திருமாவளவன்.

இதேபோல் ஸ்டாலினை தலை மேல் வைகோ தூக்கி வைத்து கொண்டாடினாலும் அவரை திமுக சீனியர்கள் ரசிக்கவில்லை. ஸ்டாலினும் கூட வைகோ தம்முடன் இருப்பதை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அண்மையில் துரைமுருகன் பேட்டி வெளிவந்தது.

திருமாவளவனும் வைகோவும் தங்களது கூட்டணியில் இல்லை என துரைமுருகன் பகிரங்கமாகவே கூறியிருந்தார். திமுக சீனியர்கள் தங்களை ஏற்கமாட்டார்கள் என்பதை தெரிந்தே வைகோ ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு முயற்சித்துவிட்டார் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். இதனால்தான் கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அமைச்சர்களின் பணியை புகழ்ந்து தள்ளினாராம் வைகோ.

இப்படி திருமாவளவனும் வைகோவும் அதிமுக பக்கம் சாய்வது தொடர்பாக அண்மையில் கொங்கு அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடியிடம் விவாதித்துள்ளனர். அப்போதுதான், கவலைப்படாதீர்கள்.. திருமாவளவனும் வைகோவும் நம்ம கூட்டணியில் இடம்பெறுவது உறுதி என அடித்து சொல்லி இருக்கிறார் எடப்பாடி. இந்த தகவல் அப்படியே டெல்லிக்கும் தங்கமான அமைச்சர் மூலம் பாஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.

டெல்லியும் தங்களது விருப்பப்படி திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையாது; திருமாவளவனும் வைகோவும் தங்களது ஸ்லீப்பர் செல்களாக வலம் வருகிறார்கள் என மகிழ்ந்து போயுள்ளதாம்.

- எழில் பிரதீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>