தமிழகம், புதுச்சேரியில அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழையும், புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Moderate-rain-for-24-hours-in-Tamilnadu-Weather-Research-Center