திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவுக்கு போன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தாய்கழகம் திரும்புகிறார். செந்தில் பாலாஜியின் மீள் வருகை கொங்கு மண்டல திமுகவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
ஆனால் தென்மண்டலத்தில் அழகிரியின் ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜியைவிடவா அழகிரி துரோகியாகிப் போனார்? அழகிரியை திமுகவில் சேர்க்க ஏன் தயக்கம்? என சீறுகின்றனர்.
ஸ்டாலின் தலைமையை ஏற்கவும் தயார் என்று கூட அழகிரி பேட்டி கொடுத்திருந்தார். அதன்பின்னரும் அழகிரியை சேர்க்காமல் இருப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளராகவும் செந்தில் பாலாஜி அறிவிக்கப்படார் என்கிற செய்தியும் அழகிரி ஆதரவாளர்களை ஆத்திரப்பட வைக்கிறது. திமுகவில் வேற தகுதியான வேட்பாளரே இல்லையா? என்பது அழகிரி ஆதரவாளர்களின் கேள்வி.