வங்க கடலில் டிச.19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு- தற்போதைய புயலால் மழை வராதாம்!

new low pressure in bay of bengal on dec 19

by Mathivanan, Dec 16, 2018, 22:40 PM IST

வங்கக் கடலில் டிசம்பர் 19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது; தற்போதைய பெய்ட்டி அல்லது பே-ட்டி புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என Tamilnadu weather report முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:


பே-ட்டி (Phethai) புயல் தற்போது தீவிரப்புயலாக மாறி சென்னைக்கு கிழக்கே-வடகிழக்கே 270கி.மீ தொலைவிலும், காக்கிநாடா (ஆந்திரா) தென்கிழக்கே 410கி.மீ, மச்சிலிப்பட்டணம் தென்கிழக்கே 380கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல்/பிற்பகலில் காக்கிநாடா (ஆந்திரா) அருகே வலுவிழந்து கரையை கடக்கும். தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இத்தாழ்வு நிலை உருவாகியது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் தான் இது தமிழகத்தை நோக்கி நகர மிக சாதகமான இடம் தான். ஆனால் அதே சமயத்தில் இமயமலை பகுதிக்கு வந்த மேற்கத்திய கலக்கம் (western disturbances) இத்தாழியை வடக்கே ஈர்த்தது, இண்டோ-பசிபிக் உயர் அழுத்தமும் நமக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரவே சாதகமாக அமைந்தது.

மேற்கு-வடமேற்கே நகர்ந்து சென்னைக்கு சற்று மழை கொடுத்து செல்லும் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்ததால் சென்னை,திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லாமல் மிதமான காற்று,குளிரை ஏற்படுத்திவிட்டு நம்மை விட்டு அகன்று சென்றது புயல்.

சென்னை,தெற்கு ஆந்திரா கடல் பகுதியின் வெப்பநிலை, சாதகமான சூழல் காரணமாக தற்போது தீவிரப்புயலாக மாறிய பே-ட்டி. நாளை காலை முதல் காற்று முறிவு மற்றும் அசாதரணமான சூழலால் வலுவிழக்க துவங்கி செயலிலந்து காக்கிநாடா (ஆந்திரா) அருகே நாளை கரையை கடக்கும்.

நெல்லூர் - மச்சிலிப்பட்டணம் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, சென்னைக்கு மழை யும் எதிர்ப்பார்த்தோம்...ஆனால் புயல் காக்கிநாடா செல்கிறது, சென்னைக்கு மழை பெய்யவில்லை 2018 ல் நமது கணிப்பில் சிறு பிழை இதற்காக வருந்துகிறேன்... மன்னிப்பு கேட்கிறேன் சென்னை வாசிகளுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு.

புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்திருந்தாலோ, சற்று மேற்கு திசையில் நகர்ந்து சென்னையை ஒட்டி வந்திருந்தாலோ நமக்கு மழை கிடைத்திருக்கும் ஆனால் தற்போது யாருக்கும் பயணற்று போனது.

அடுத்த தாழ்வு நிலை வரும் 19ம் தேதி உருவாக வாய்ப்பு நாளை விரிவான அறிக்கையுடன் வருகிறேன்.

You'r reading வங்க கடலில் டிச.19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு- தற்போதைய புயலால் மழை வராதாம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை