மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி.யிடம் கனிமொழி கோபப்பட்டுஆவேசமாக என்ன அநியாயம் இது.. என தமிழில் பேசியது பரபரப்பாகி உள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடந்தது. திமுக எம்.பி. கனிமொழி இந்த மசோதாவை எதிர்த்து பேசினார்.
பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறு என்று குறிப்பிட்ட கன்மொழி சட்டமாக்கும் முன் நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இதன் பின் தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசிய போது கூறிய கருத்துக்களுக்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்து அவரது இருக்கை அருகே சென்றார்.
ரங்கராஜனை நோக்கி என்னங்க இது அநியாயமா இருக்கு என்று கைகளை நீட்டி கனிமொழி ஆவேசத்துடன் கூறியதால் மற்ற எம்.பி.க்கள் வியந்தனர்.