தினமும் 3.21 ஜிபி டேட்டா 74 நாள்களுக்கு... ஜியோவுக்கு போட்டியா?

BSNL announced excited recharge plans

by SAM ASIR, Jan 17, 2019, 18:41 PM IST

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கு தினசரி 3.21 ஜிபி டேட்டா வசதியை 74 நாள்கள் தருவதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, 345 ரூபாய்க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை 70 நாளுக்குத் தரும் நிலையில் பிஎஸ்என்எல் இப்புதிய அறிவிப்பை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே 'ராக்கி சலுகை' என்ற பெயரில் இந்த 399 ரூபாய் பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டது. எண்ணற்ற அழைப்புகள், நாள்தோறும் இலவசமாக 100 குறுஞ்செய்திகள், இலவச ரிங் பேக் டோன் (PRBT)இவற்றுடன் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வசதி தருவதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத்திட்டத்தில் தற்போது 3.21 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி வரை ரீசார்ஜ் செய்வோருக்கு இந்தக் கூடுதல் டேட்டா சலுகை கிடைக்கும்.

மற்ற சிறப்பு கட்டண சலுகைகள் போல் அல்லாது இதில் டெல்லி மற்றும் மும்பை தொலைதொடர்பு வட்டங்களிலிருந்து செய்யப்படும் அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கணக்கிடப்படும். நாளொன்றுக்கு 3.21 ஜிபி அளவை தாண்டும் பட்சத்தில் தரவிறக்க வேகம் 80 கேபிப்பிஎஸ் ஆக குறையும் என்று தெரிகிறது. 74 நாள் கால அளவில் மொத்தம் 237.54 ஜிபி டேட்டா பயனருக்குக் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியா என்ற கேள்வி எழும்போது, பிஎஸ்என்எல் இன்னும் 2 ஜி / 3 ஜி அலைக்கற்றை வேகத்திலேயே இருப்பது பெரிய குறைபாடாகக் கருதப்படுகிறது.

You'r reading தினமும் 3.21 ஜிபி டேட்டா 74 நாள்களுக்கு... ஜியோவுக்கு போட்டியா? Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை