மொபைல் எண்ணை பயன்படுத்தியே வாட்ஸ்அப் செயலியை போனில் நிறுவ முடியும். நமது தொடர்பு பட்டியலில் இருப்பவர்கள் எல்லாருமே நம் வாட்ஸ்அப் எண்ணை தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் செயலிக்கு பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் எண்ணை மாற்றினாலும், எண் மாற்றப்பட்டுள்ளது என்ற தகவலும் புதிய எண்ணும் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடும்.
ஆனால், சிலருக்கு தங்கள் மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிவதில் உடன்பாடு இருக்காது. மற்றவர்களுக்கு என் மொபைல் எண் தெரியாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா? என்று சிலர் கேட்கக்கூடும்.
அவர்களுக்கான வழிகாட்டும் குறிப்புகள்:
மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கென புதிய மொபைல் எண் (சிம் கார்டு) ஒன்றை வாங்குங்கள்.
அந்த எண்ணை பயன்படுத்தி நிறுவிய வாட்ஸ்அப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து நீக்குங்கள்.
பிறகு வாட்ஸ்அப் செயலிக்கு பயன்படுத்திய எண்ணுக்கான சிம் கார்டை எடுத்து, வேறொரு போனில் மாட்டுங்கள்.
வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த வேண்டிய போனில் புது சிம் கார்டை செருகுங்கள்.
அந்த ஸ்மார்ட்போனில் மீண்டும் வாட்ஸ்அப் செயலியை நிறுவுங்கள்.
இப்போது வாட்ஸ்அப் செயலி, பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் ஒன்றை பதிவிடும்படி கூறும். புதிய எண்ணை பதிவிடுவதற்குப் பதிலாக, ஏற்கனவே இருந்த பழைய எண்ணையே செயலியில் பதிவிடுங்கள்.
வாட்ஸ்அப் செயலி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய குறியீட்டினை (OTP) பழைய எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும். அந்த குறியீட்டினை பயன்படுத்தி, வாட்ஸ்அப் உபயோகிக்கலாம். உங்கள் புதிய எண், யாருக்கும் தெரிய வருவதற்கு வாய்ப்பில்லை.